Saturday, July 10, 2010

நான் யார் ?



நான்  யார் ?   ஊர் எல்லையை  தாண்டி  தோப்புல  இருக்குற   வீரப்பன் மவன்  முனியாண்டி. 

அதான்   நீயா இல்ல வேற  எதாவதுமா ?

அய்யா என்ன கேக்குறியோ? 

இல்லடா நீ சொல்லற முனியாண்டியா   இல்லாட்டி  முனியாண்டின்னு வேறு எதுமா?

வீரப்பன் மவன்தாங்க நான்.

என்னங்க ஆத்தா ஊத்தி தர்ற கஞ்சிய குடிச்சுட்டு வய வேலக்கு போறது. சாங்காலம்   வேல முடிஞ்ச கையோட  வூட்டுக்கு வர்றது இதாங்க வேல..

எல  முனி இந்த மடைய  பாரு…

எல முனி  அந்த வயல தண்ணி கெடக்கா பாரு … வயகாரு கூப்புடறப்ப தெரியுங்க நாந் தான் முனியாண்டி

இத தாண்டி  வேற முனியாண்டிங்கிற எதுங்க ?

நான் யாரு  நம்ம மனசுல கேள்வி கேட்டு கிட்ட  இருந்தா  நீ முனியாண்டி யான்னு சந்தேகம் வந்துறுச்சுன்னா  நீ யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கான முதப்படி சொல்றாங்க

அய்யா சாமி  நாளக்கு  காத்தால  நடவு எல்லா வயலுக்கு தண்ணி பாய்க்கனும்  அதாங்க நமக்கு  எண்ணமா இருக்கு

இதயும்  தாண்டி நான்   கேள்வி கேட்டேன்னா  நாள வவுத்து பாடு சங்கடங்க…

1 comment:

ஜோதிஜி said...

நான் கல்லூரி படிக்கும் போது இது போன்ற மன விசாரங்களை டைரிக்குறிப்புகள் போல் எழுதி வைத்துக் கொண்டுருந்தேன்.

LinkWithin

Related Posts with Thumbnails