Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Tuesday, November 09, 2010

நான் இருமை



மனமாகிய தன்மை
மனமற்ற தன்மை
நான் இருமை
கிளைக்கிறேன்
தொடர்பு பெறுகிறேன்
மனமாகி சிதைந்து
நான்
கொப்பளிக்கும்
எண்ண குழம்பினுள்
சிக்குகிறேன்
ழுழ்குகிறேன்
அய்யோ…!
அறைகூவல்
சின்னதாய்   விழிப்பு
கால்கள் உதைத்து
கைகள் அடித்து
தலை தெரிய மேல்
எழும்பி
திரும்பவும்
ழுழ்குகிறேன்.

Saturday, July 10, 2010

நான் யார் ?



நான்  யார் ?   ஊர் எல்லையை  தாண்டி  தோப்புல  இருக்குற   வீரப்பன் மவன்  முனியாண்டி. 

அதான்   நீயா இல்ல வேற  எதாவதுமா ?

அய்யா என்ன கேக்குறியோ? 

இல்லடா நீ சொல்லற முனியாண்டியா   இல்லாட்டி  முனியாண்டின்னு வேறு எதுமா?

வீரப்பன் மவன்தாங்க நான்.

என்னங்க ஆத்தா ஊத்தி தர்ற கஞ்சிய குடிச்சுட்டு வய வேலக்கு போறது. சாங்காலம்   வேல முடிஞ்ச கையோட  வூட்டுக்கு வர்றது இதாங்க வேல..

எல  முனி இந்த மடைய  பாரு…

எல முனி  அந்த வயல தண்ணி கெடக்கா பாரு … வயகாரு கூப்புடறப்ப தெரியுங்க நாந் தான் முனியாண்டி

இத தாண்டி  வேற முனியாண்டிங்கிற எதுங்க ?

நான் யாரு  நம்ம மனசுல கேள்வி கேட்டு கிட்ட  இருந்தா  நீ முனியாண்டி யான்னு சந்தேகம் வந்துறுச்சுன்னா  நீ யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கான முதப்படி சொல்றாங்க

அய்யா சாமி  நாளக்கு  காத்தால  நடவு எல்லா வயலுக்கு தண்ணி பாய்க்கனும்  அதாங்க நமக்கு  எண்ணமா இருக்கு

இதயும்  தாண்டி நான்   கேள்வி கேட்டேன்னா  நாள வவுத்து பாடு சங்கடங்க…

Tuesday, May 25, 2010

என்னில் நீ இருப்பதை அறிந்தும்



தெய்வமாய் நீ
உந்தன்  சிறப்பால்
எந்தன் சிறுமையின்
உயர்வு

எத்துனை சிறப்புகள்
உனக்கு
உன் நினைவதனில்
அமைதி தந்தவனே

தன் குழுந்தை
சோறு ஊட்ட
அம்மா சொல்லும்
கதைக்கு கருவாய்
வந்த நிலவா நீ

பனித்துளிகள்
பரிதவிக்க
காலையில் தோன்றும்
உதயமா நீ

எதுவாய் நீ?
எல்லாமும் நான்
எப்படிதான்
உனைப்பார்க்க

உனைப்பார்
நான் தெரிவேன் என்று
நீ சொல்ல

எனைப்பார்க்க
கொஞ்சம் உண்மை
கொஞசம் இரக்கம்
நிறைய குழப்பம்
நீங்காத அகங்காரம்

ஏடு படித்து
என்னுள் நீ என்பதை
நான்  அறிய

என்னுள் நீ என்பதை
நான் உணர
வரும் நாள்
எந்நாளோ என்னவனே...


Wednesday, April 28, 2010

விட்டில்பூச்சி



ஒரு நாள் வாழ்வு
மரணம்  அழைக்க
விளக்கு வெளிச்சம்
நோக்கிய
எனது பயணம்
நான் விட்டில்பூச்சி

LinkWithin

Related Posts with Thumbnails