இன்று தினமணி செய்திதாளின்
தலையங்கத்தில்எது சமச்சீர் கல்வி? என்ற
தலைப்பில் ஆசிரியர்களையுடைய தரத்தை
பரிசோதனை செய்ய யோசனை சொல்லி உள்ளார்கள்.
“பள்ளிகளில் மாணவர்களை
மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய
தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம்
வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள்
மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில்
தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து
திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க
முன்வருவார்கள்.”
செய்தியின்
சுட்டி இங்கே…
இந்த அரசு செய்யவேண்டிய
மிகமுக்கியமான மிக அவசரமான காரியமும்
கூட….
இதையெல்லாம் இந்த அரசுக்கு எடுத்துரைப்பவர்கள் எடுத்துரைத்தால் நன்றாக
இருக்கும்.
தமிழக ஆசிரியர்களில் நிறையபேருக்கு
கற்பித்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் எந்தவிதத்திலும் தங்களை அப்டேட்
செய்து கொள்வதே கிடையாது.
தமிழக அரசு உடனடியாக அமுல்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.
செய்வார்களா…..???!!!
