களத்துமேட்டு
குப்பையை
கிளறிய கோ ழி
வேலிகால் முறித்து
பயிர்மேய்ந்த
மாடு
ஒரு ரூபாய் கூலி
தேநீர் வாங்க
ஓடிய சிறுவன்
உயிருடன் விளை யாட்டு
ஒற்றை கயிற்றில்
வித்தை
பசிக்காய் செயல்கள்
ஏதும் அறியாது.
நீண்ட
மௌன யுத்தம்
உச்சியில்
பறக்கும் பறவையின்
பறத்தல் ஓசையில்
கலையாத
வானத்தின் மௌ னம்
இலை கள்அசையாது
காற்று
தன் மௌ னம்
வெளிப்படுத்த
திக்கற்ற இலக்கில்
வெறித்த பார்வை
இமைகள் மூடாது
தன் மௌ னம்
வெளிப்படுத்த
வழிந்த கண்ணீர்
கோடுகள்
பசித்தசிறுவனின்
யோ சிப்பில்
காலம்
தன் மௌ னம்
வெளிப்படுத்த….
அகதிகள் முகாம்
ஆறுமணிக்கு
சாப்பாடாம்அறிவிப்பு.