Wednesday, August 11, 2010

ஆடிப்பெருக்கும் நடுத்தரவர்க்கமும்

என்னங்க   நாளைக்கு ஆடிப்பெருக்கு  சாமான் வாங்கனும் மறந்திடாதீங்க...

என்ன வாங்கனும் …

பூச சாமான் பழம் மளிகை சாமான்  தாங்க..

என்னடி எல்லாத்தையும் சொல்ற….

ஆங்க காய்கறி மறுந்துட்டங்க அதயும் சேர்த்துங்க..

சரி  என்றவாறு யோசனையில் ஆழ்ந்தான் . குறைந்தபட்சம் 400  இல்லாட்டி 500 ஆகும். என்ன  செய்வது…

யோசனை….யோசனை….

என்னங்க யோசனை… மனைவி

ஒன்னும் இல்ல.. நாளைய செலவுக்கு என்ன செய்ய… அதான்.

எப்படியோ   பண்ணிதான் ஆகனும் பண்ணாம    எப்படி இருக்குறது.

எல்லாரு போலவும் நாமளும் செய்யவேண்டியிருக்கிறது .

கடன் வாங்க வேண்டியஇடத்துல வாங்கியாச்சு..இதுக்கு எங்க போறது.

எதாவது பண்ணுங்க…மனைவி.

என்னடீ சூழல் தெரிஞ்சுதான் பேசிறியா..

இல்லீங்க நாளக்கு  சாமி கும்பிடனுமுல்ல அதான்.

பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் என்றான்.

மறுநாள் சாமி கும்பிட்டார்களா என்று தெரியவில்லை.

இதுநாள் வரையில் கண்களி்ல் அகப்படவில்லை.

Thursday, August 05, 2010

உயிர்ப்பின் உரிமை



வெளிவந்த வார்த்தைகள்
மனதின் உள்இருப்பை
முகம் காட்டி
செயல்காட்டி
 “ தத்தி”  யாய்
பெயர் அறியாமை
உள்ஒன்றாய்
புறம் ஒன்றாய்
முகம் காட்டாது
செயல் மறைத்து
வஞ்சகமாய்உருவாகி
ஒன்றிலும் நில்லாது
காலங்கள்ஏற்ப
முன்பின் ஓடி
அலைதல் வாழ்வாய்
தற்காத்து பிழைக்க
உயிர்ப்பின் உரிமை
அறியாமையும்
வஞ்சகமும்

Wednesday, August 04, 2010

எந்த வேசி மவனோ ?



ஏன் சார்லஸ் கடைக்கு போவலையா?

இல்லீங்க சாமான் வாங்க வந்தேன்…சைக்கிள வச்சிட்டு சாமான் வாங்கிட்டு வெளில வந்து பாத்தா சைக்கிள காணோம்?

பூட்டு ன சைக்கிள ஒண்ணு  நிக்கது?

எந்த வேசி மவனே ா     எடுத்துட்டு போயிட்டாங்க அதான்  நின்னுகிட்டே  இருக்கேன்.

வாய் முனுகியது. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை நடந்தது.

வைத்த கடைக்கும் மறு கடைக்கும் நடந்தார். கோபம் பொங்க வாய் வார்த்தைகள் அள்ளி வீசி கொண்டிருந்தது.

பூட்டின சைக்கிள் அருகில் நின்று கொண்டு

ராஜா இது உங்க சைக்கிளா...

எங்க இது உங்க சைக்கிளா....

எண்ண    இது உங்க சைக்கிளா...

அருகில் நின்றவர்களிடம் விசாரித்தார். எல்லோரும் இல்லைஎன்று தலையாட்டினார்கள்.

சைக்கிள்  பூட்டியிருந்தது. மாத்தி எடுத்து சென்று விட்டார்கள் போல  பூட்டை உடைத்து எடுக்க வேண்டியது தான் என்று சொல்ல....

அரக்க பரக்க சிறுவன் பல் மருத்துவமனையிலிருந்து ஓடிவந்தான்.

ஏங்க என் சைக்கிள் பூட்ட உடைக்கினும் சொல்றீங்க என்று கேட்டபடியே வந்தான்.

இது உன் சைக்கிளா.... என்றப்படி இன்னும் வேகமாய் திட்ட ஆரம்பித்தார்.

அவர் என்ன செய்ய முடியும் நாள் ஒன்றுக்கு ரூ. 120  சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

ஏமாற்றமான முகத்துடன் கோபமாய்   திட்டி கொண்டே சென்றார் எல்லோருடைய பார்வையும் அவர்மேல் குவிந்திருந்ததை தவிர்க்கதான் முடியவில்லை.


LinkWithin

Related Posts with Thumbnails