Monday, February 07, 2011

தூசி


வேலை முடிந்து  இரு சக்கர வாகனத்தில் திரும்ப சூரியன் கொ ஞ்சம் கொ ஞ்சமாய் தன்னை  மறைக்க துவ ங்கியிருக்க வசந்தகால த்தின் ஆ ரம்பம்  காற்று வீசிய தாலாட்டில்
மகிழ்ந்த மனது  .

அ டையாளம் கண்டு புன்னகை செய்தவர்களுக்கு எதிர்புன்னகை  செய்து கடக்க இருசக்கர வாகன ஓ ட்டத்திற்கு இணை  யாக மனதின் எண்ணஓட்டங்கள்.

மேட்டிலிருந்து பள்ளம் இறங்கிய  வண்டி பறந்ததூசி ஒரு கண்ணின் உள்ளே  அனுமதியின்றி குடியேறி மேல் இமையின் உட்புறம்  அ மர்ந்தது. ஈரத்தினால்   நன்றாய் ஒட்டி கொள்ளும்   மெல்லிய தூசிவேடிக்கை  காட்ட  விளை யாட்டு தொ டங்கியது.

கண்ணின் உறுத்தல் முக்கியமாய் நினைவுகள் அறுப்பட்டு போனது.

கண்இமையை  கசக்கி வெளியேற்ற முயல கண்ணீர்  வர தூசி நகராது அடம்பிடிக்க கண்ணை  திறந்தாலே உறுத்தியது.
பொறுத்தபார்த்த மற்றொ ரு கண்ணும் அழ ஆ ரம்பிக்க செயல்
தீவிரம் அ டைய ...விடா முயற்சி...உறுத்தல்.

ஏங்க...என்ன ஆ ச்சு ?  நலம்விரும்பிகளின்  கேள்வி.

கண் இமையை கசக்கியதால் இரத்த சிவப்பாய் கண். இரண்டு கண்களும் சேர்த்து அதிக வெப்பத்தை வெளிப்படுத்த உறுத்தலின் பிடியில் மூளையும் உடம்பும்.


 மறுநாள் காலை வரை கண் இரத்தசிவப்பை  தக்கவைத்துகொள்ள காரண  மாய் அ ந்த  தூசி.

Thursday, February 03, 2011

அவர்



தலையில் முண்டாசு காக்கிகால்சட்டை இடுப்பில் பச்சை பெல்ட் மேல் வெள்ளை பனியன் எவரிடமும்  அதிகம் பேசாதுவேகமான  நடை   முழுதும் நரைத்த தலைமுடி தாடி மீசை வெளுத்த மார்ப்புமுடிகள் அவரை சுலபமாய் அடையாளப்படுத்தும் .

வயதுக்கான உடலோ  மனமோ  கொ ஞ் சமும் இ ல்லாதவர் நரைத்த முடியை வைத்து  அ னுமானித்தால் உண்டு.

உடலை  பாதிக்கின்ற எந்தவிதமான  பழக்கவழக்கங்களுக்கும் உட்படாத   இன்றள வும் இளை ஞ னின் சுறுசுறுப்பாய் அ வர்.

இருவர் பெண்பிள்ளை கள் மூவர் ஆ ண்பிள்ளைகள். தன்  ஆ ண்பிள்ளைகளுக்கு தனி தனியாக  வீடு  பெண்பிள்ளை கள் இருவரையும் நல்லமுறையில் திருமண  ம் செய்வித்தார்.

தான் பார்த்த அ ரசாங்க வேலையில்   ஓய்வு பெற்றவுடன் வ ந்த பண த்தில் பிள்ளை களுக்கு கொடுத்தார். பிள்ளைகள்  சிலர் வாங்கி கொள்ள  சிலர் மறுக்க  ..மறுத்த பிள்ளை  களை   பற்றி சிறிதும் கவலை படவில்லை .

உடல்தகுதி மனமும் இளமை  அவரில் தோன்றும் எண்ணங்களுக்கு பதிலாய்  தன்னை   கடுமை யான  விரதங்களுக்கு உட்படுத்தி  மாதம் ஒரு கோவில் போய்விடுவார்.

தன்னள வில் தான் ராஜாவாய் இருந்து தன்னை சார்ந்தவர்களுக்கும் செய்து மனிதர்களில் முன்மாதிரியாய் இருப்பவ ர்.

அவர் தான் தோட்டி என்று பொதுசனங்களால் அ ழைக்கப்படும் குப்புசாமி.
பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்யும்  துப்புரவு பணியாளர் தொம்பன் இனத்தை சார்ந்தவர்.

புகைப்படதொகுப்பு எங்க ஊரு










LinkWithin

Related Posts with Thumbnails