Monday, May 09, 2011

போதும் பொண்ணு



பணம் தான் வாழ்வு  என்ற சூழலில்இயற்கையை  நாம் எவ்வளவு மோசமாக கையாள்கிறோம் என்பதை நாலு வரிகளில்  அழகாக எடுதுரைத்தது  பிடித்தது.

"தாமிரபரணி'யின் நல்லகண்ணு பாராட்டு விழா அழைப்பிதழில்………

 "இயற்கையை மாற்றினால்' என்றொரு கவிதை இருந்தது.

அது மனதைத் தொட்டது; மனசாட்சியைச் சுட்டது.


கடைசி மரமும் வெட்டி உண்டு

கடைசி நதியும் விஷம் ஏறிக்

கடைசி மீனும் பிடிபட

அப்போதுதான் உறைக்கும்

பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!

(நன்றி  தினமணி)

நகை  கடையில் ஒரு பெண்ணை   பார்த்து முகவரிக்காக பெயர்கேட்டார்கள்.

அந்த பெண்..போதும் பொண்ணு என்றது.

கடைக்காரர்க்கு ஆச்சரியம் திரும்பவும் கேட்டார்.

அட..ஆமாங்க  எம் பேரு போதும் பொண்ணு தான் என்று சொ ல்ல…

திரும்பவும் அவரே விளக்கம் தரும் பாணியில் எங்க  வீட்டுல  நான் நாலாவது பொண்ணுங்க இதோட பெண்பிள்ளை  போதும்  என்பதற்காக   எம்பேர போதும் பொண்ணு  வைச்சாங்க…

அதற்கு பிறகு பொறந்த புள்ள ஆம்பள   புள்ளங்க…
என்றார்.

கேட்க ஆச்சரியமாய் இருந்தது. எல்லாம் நம்பிக்கை  தான்.



Wednesday, May 04, 2011

தடம் மாறாத தண்டனை கள்.


அந்த பெண்ணை     போய் அழைத்துவந்தவர்களில் ஒருவர் செல்போனில் சத்தம் போட்டுகொண்டிருந்தார்.

யோ வ் ராமலிங்கம் ..அந்தபார்ட்டி என்னபுடிச்சு நச்சரிக்கிறான்..

நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க…என்னய்யா  பதில் சொல்லறது.

நீங்க தானே என் பொண்டாட்டி அழைச்சிட்டு போனியோ …

நீங்களே கொண்டுவந்துவிடுங்க அப்படீன்னு பார்ட்டி நச்சரிக்கிறான் என்றார் பஞ்சாயத்து பேசப்போனவர்களில் ஒருவர் .

படிச்சப் பொண்ணா  பாத்து கட்டிட்டு வந்துட்டான் வந்த எடத்துல மாமியாரு மருமகளுக்கு ஆவல  போலிருக்கு…

அதனால  காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் வெயில்ல நிக்கவைச்சிருக்கான் மாப்பிள்ளகாரன்பொண்ணுவீட்டுகாரனுக்கு தெரிய அங்குள்ள பெரிய ஆட்களை   பெண்வீட்டுகாரர்கள் அணுக …

இங்குள்ள  பெரிய ஆட்களை  அணுகி அவ ங்கிட்ட பேசி பொண்ண  தனியா  ஊருக்கு அனுப்பிவிட்டுருங்க என்று சொல்லஇவர்கள் ஏதோ பேசி பெண்ணை   காரில் ஏற்றி அனுப்பி விட  

மாப்பிள்ளையும் சொந்தகாரர்களும் இப்பொழுது இவர்களிடம்                   வாங்க போயி பேசுவோ ம்  என்று ஒற்றைகாலில் நிற்கிறார்கள்.

இந்த உலகம் எவ்வளவு தான் வேகமாக போனாலும் அல்லது சிந்தனை செய்தாலும்எத்தனை   தலை முறைக்கு இன்னும் இதுமாதிரியான தண்டனை கள் இருக்கபோகிறதோ  தெரியவில்லை ?

பழமையில் ஊ றிய திருந்தா ஜென்மங்கள் இருக்கும் வரை    இது மாதிரியான  நிகழ்வுகளுக்கு அழிவில்லை  தான் போலும்.

எல்லா வசதியும் உள்ளவனிடம் இப்பிரச்சனை   நடக்கிறது என்பது மிகமுக்கியம்.



Tuesday, May 03, 2011

அடிமை வாழ்வு




ஈரம்காய
இன்னும்சில
நாட்கள்
மண்ணில்புதையுண்ட
விதைகளின் உயிர்ப்பு
சூரிய பார்வையில்
வள ர்ச்சியென்று
உயிர்ப்பின்
முன்னோக்கிய வேகம்
சுதந்திர நினைவுகள்
மனதில் புதைந்திருக்க
அடிமை வாழ்வு
வள ர்ச்சியின் காலங்களை
எதிர்நோக்கி
பாதுகாத்து
கொ ள்ளப்படும்
உயிர்ப்புகள்.


LinkWithin

Related Posts with Thumbnails