Showing posts with label காலம். Show all posts
Showing posts with label காலம். Show all posts

Tuesday, October 05, 2010

முக்காலம்



கால்கள் நடந்துவிடும்
தூரம்
வாழ்வின் எல்லைகள்
நடக்கிறேன்
சோர்வடைந்தாலும்
நடப்பதை மறக்கா
கால்கள்
முள்குத்தியது
வலி அரற்றிய மனது
நிற்காமல்
முன்னோக்கிகால்களின்
பயணம்
இன்று தெரிந்த
எல்லைகள்
நாளை தெரியாமல்
நீண்டது
மூச்சு முட்டிய து
நேற்று
நடந்தே ஆகவேண்டும்
நான்  நானாக…

Sunday, November 15, 2009

இல்லாமல் இருந்தபொழுது


கஷ்டபட்ட குடும்பம் கால சுழற்சியில் மேல் எழுந்தது. மற்ற குடும்பங்களை தாண்டி முன்னோக்கி சென்றது.

மனிதர்களின் குணமும் மாறத் தொடங்கியது. மற்றவர்களுக்கு உண்டான மரியாதை உறவுகளுக்கான மதிப்பு குறையத் தொடங்க முடிந்தவர்கள் தாங்கி கொண்டார்கள். முடியாதவர்கள் உள்ளுக்குள் குமைந்தார்கள்.

அவர்களின் காலம் இருப்பவர்கள் அள்ளி முடியலாம் அள்ளி முடிந்து கொண்டார்கள்.

இல்லாது இருப்பவர்களை பார்த்து எள்ளினார்கள்.

இது அவர்களின் காலம்.

இல்லாமல் இருந்தபொழுது இருப்பவர்களால் இவர்களும் எள்ளி நகையாடப்பட்டவர்கள் தான்…….

Friday, February 06, 2009

அன்புள்ள காதலா அன்புடன்…4

பேசும் விழிகளுக்குள்
மௌனமாய்
நான்

கருவிழி
எல்லைகளுக்குள்
சிறைப்பட்ட
எனது உருவம்

இதய துடிப்பாய்
சுருங்கி விரியும்
இமைகளின்
பாதுகாப்பு

தப்பி ஓட
நினையும்பொழுது
தடுத்து விட

என்னவன்
விழி சிறைக்குள்
நான்
சிறைப்பட்டாலும்

காலங்கள்
யாவும்
விநாடிகளே..

Sunday, January 18, 2009

பிரபஞ்சத்தின் போக்கு எங்கே செல்கிறது?

மிதிவண்டி முன்னேற மறுக்கும் காற்றின் எதிர்திசையில் சில அடிகள் முன்னேற பல நிமிடங்கள் ஆகும்.

காற்றின் போக்கில் மிதிவண்டியின் வேகம் கூடும் காற்றின்போக்கில் காற்றுகாலம் என்னவோ மழைகாலமாக மாறிய விந்தை.

முன் வருடங்களில் பிய்ந்து போன பூ இதழ்கள் உதிர்ந்த சருகுகள் பச்சை இலைகள் வீதியெங்கும் பரவி கிடக்கும் அழகு. காற்று காலத்தின் முத்திரை தெளிவாய் தெரியும்.

இவ்வருடம் என்னவோ எதுவுமே நடைபெறா செயலாய் சூரியன் தலைக்காட்டா மேக கூட்டமாய் இரவானால் நட்சத்திரங்கள் காணாமல் போக கருமேகங்கள் கனமழை பெய்த அற்புதம்.

பிரபஞ்சத்தின் போக்கு எங்கே செல்கிறது? விடை தெரிந்ததாய் சில காரணங்களை அறிவியல் உலகம் சொல்ல விடை தெரியா யாரும் அறியா காரணங்கள் எத்தனை எத்தனை என வரும் காலங்கள் தெளிவாய் உணர்த்தும்.

அறியா புதிராய் பல்வேறு மாறுதல்களின் கையிருப்பு பிரபஞ்சத்தின் உள்ளே..

LinkWithin

Related Posts with Thumbnails