
Thursday, July 07, 2011
Tuesday, July 05, 2011
வாழ்க்கை ஓடி கொண்டுதான்...
மனதளவில் நொறுங்கி போயிருந்த அவன்
மனதை சரிசெய்யவது என்பது கடினமாகத்தான்
இருந்தது. அவனுடைய பார்வையில் அவன்
உலகத்தில் அவன் ராஜாவாய் இருந்ததால்
முழுமையாக
தன்னுடைய வழி சரியென்று
பொருந்திப்போனான்.
தன்னம்பிக்கை புத்தகங்களின்
மேற்கோள்கள் நண்பர்களின் கவுன்சிலிங் என அவனுடைய
பிரச்சனைக்களுக்கு தீர்வு காண
ப்பட்டாலும் அவன் பிரச்சனை தீர்ந்துபோய் விடவில்லை.
கேட்கும் நேரங்களில் கவனமாய்
கேட்பான் . செயல் படும் விதம் என்னவோ அவன் மனஇயல்பு படி தான் செய்துமுடிப்பான்.
வாழ்க்கை ஓடிகொண்டுதான் உள்ளது.
நீ இதை செய்தால் என்னுடைய
சக்திக்கு தகுந்த மாதிரி நானும் அதை உனக்கு
செய்வேன்.
அவசியம் கருதி அவர்களிடம்
சொல்லாமல் ஒரு செயல் இவன்
நிகழ்த்திவிட்டால் பதிலுக்கு பதில் செயல்களின் திட்டங்கள் போடப்படும். பதில்
செயல்கள் செய்யும் காலங்கள் எதிர்நோக்கப்படும்.
பதிலுக்கு செய்து முடித்தால் தான்
நிம்மதி.
வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.
எதிராளி அவர்களுக்கு செய்யவேண்டும்
ஆனால் எதிராளிக்கு அவர்களைப் பற்றி
எந்தகவலையும் கிடையாது. தன்னுடைய முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாய்…
எதிராளி யின் பயன் தரும் செயல் பாதிக்கப்பட்
டால் எத்தனைவருடம் பக்கதில்
இருந்தும் தூசி தான் அவர்கள்.
வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.
செயல்களுக்காய் முகம் பூத்து கிடக்கும் செயல்கள் முடிந்தவுடன் ரயில்
பயணத்து நட்புகளாய் உறவுகளும் நட்புகளும் …
வாழ்க்கை ஓடி கொண்டு தான் உள்ளது.
வாழ்வின் நகருதல்கள் இதுபோல் பல்வேறு கரைகள் தொட்டே ஓடி கொண்டு தான் உள்ளது.
Monday, July 04, 2011
காசு வருகிறது
Subscribe to:
Posts (Atom)





