Thursday, August 26, 2010

ஏமாற்றம்

முகத்தில் படர்ந்த
கருமை
தேவைக்கு ஊர்
சென்று  திரும்ப
போக்குவரத்து செலவு
போக..
மிச்சமாகும் காசு
பைசா செலவில்லா
  ர்சுற்றி
கையில் காசு மிஞ்சும்
எப்பொழுது கூப்பிடுவார்
எதிர்பார்ப்பும் கூடும்
முன்தினம் தகவல்
சொல்ல..
மறுநாள்கிளம்பி
வர..
அடுத்தவனுக்கு போன
அந்த வாய்ப்பு-இவன்
முகத்தில் படர்ந்த
கருமை...
எதிர்பார்ப்பு
ஏமாற்றமாய்...

Wednesday, August 25, 2010

அத்தனையும் பணமா?

நாலு மடிப்பாய்  வெள்ளை  சிகப்பு தாள் ஒன்று மடித்து  கிடந்தது.   என்ன அது என்ற வினாவுடனே கீழே குனிந்து அதை எடுத்தான்.

எடுத்தவுடனே   முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி யை மறைக்கமுடியாது தடுமாறினான்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  பையில் தினித்தவாறு நடந்தான்.

அப்பா…… இன்னய செலவுக்கு ஆண்டவன் கொடுத்துட்டுடான். நினைத்தவாறு மேற்கொண்டு முன்னேறினான்   ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து  கண்களால்  அங்குல அங்குலமாய்  மிகக் கவனமாக    தேடியப்படி யே நடந்தான் இன்னும் ஏதாவது   பணம்  கிடைக்குமா  என்ற தேடுதலுடன் நடந் தான் .

நடக்கும் போதே கற்பனை  வேறு ..இந்த  ஐம்பதுக்கு பதிலா  ஆயிரம் பத்தாயிரன்னு கிடைக்க கூடாதா இறைவா.

நடந்தான்….

முகம் தெரிந்தவர்களை கூட  அவன் கண்டுகொள்ளவில்லை   கண்கள் தரைப்பார்க்க  கிடக்கும்  வண்ண  காகிதங்கள்  அத்தனையும் பணமாக இருக்க மா  என்ற  எதிர்பார்ப்பில்    ஒவ்வொரு  காகிதத்தின் அருகில்   நின்று உற்றுபார்த்தவாறு நடந்தான்.

அவனுடைய  தேவையா  அல்லது அவனுடைய  ஆசையாக இருக்கலாம். அந்த   நிமிடம் முதல்  அவனுடைய  நடவடிக்கைகள்  மாறுபட்டு  இயல்பை தொலைத்த முகமாய்  நடந்தான்.


Thursday, August 19, 2010

சாதாரணன்

திட்டமிட்ட செயல்களில்
தொலைந்து போன
நினைவுகள் எல்லாம்
இன்றைய கனவுகளாய்
எதிர்பார்ப்புகளில்
தோற்றுபோனவன்
செய்கை  கடமையாய்
நம்பிக்கையாய்
செயல் தொடங்கி
முடிவுகள் வேதனையாய்
திரும்பவும்
திட்டமிடுதல் பயமாய்
உருண்டோடும் சக்கரமாய்
தோற்றவனின்  வாழ்வு.

LinkWithin

Related Posts with Thumbnails