Tuesday, June 28, 2011

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்



தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊர்களில் பழைய  கோவில்களும் உண்டு.  தெருவுக்கு ஒரு கோவில்என புதிததாய் முளைத்த பலகோவில்கள் உண்டு.

கிராம அய்யர்கள்நகரங்களுக்கு  தேவையான வருமானம் கருதி இடம்பெயர்ந்து விடுவதால் கிராமங்களில் பெரிய கோவில்கள் தவிர அய்யர்கள் தட்டுபாட்டினால்சிறு கோவில் தெய்வங்கள்   வாரம்  ஒரு முறை குளிக்கும பூ வைத்து பொட்டு வைத்து கொள்ளும்.

அய்யர்கள் தட்டுபாட்டினால் ஒரு கிராம அய்யர் குறைந்தது சிறு சிறு பத்துகோவில்கள்  தன்கட்டபாட்டில் வைத்திருப்பார்கள். அங்கு அவர் வருகை தினசரி என்றெல்லாம் இருக்காது.

அப்படி அவர்  தினசரி வருகை புரிந்து கோவில் தெய்வத்தை குளிபாட்ட வேண்டுமென்றால்  மாதம் இவ்வளவு என்று சம்பளம் பேசிக்கொடுத்துகோவில்  விசேசநாட்களில் அவர் ஏற்பாடு செய்யும்சிறப்பு பூசைகள் யாகங்களுக்கு அந்தபகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்துநடத்தினால் அந்தகோவில் கோவிலாக இருக்கும் இல்லாவிடில்  இருண்ட கோவில் தான் அது.

இன்றைக்கு தமிழகத்தின் நிறையகிராமங்களில்  உள்ள சிறு சிறு கோவில்கள் அழிந்தும் புதிததாய் முளைத்து கொண்டும் தான் இருக்கின்றன.

அய்யர் ஒருவர் பிடித்து வைத்துள்ள பத்துகோவில்களில் அதுவும் ஒன்று. சிறிய சிவன் கோவில் அது. அர்ச்சனை செய்ய நிறையமக்கள்  கோவிலுக்கு வெளியே நின்றிருந்தார்கள். மாலை ஆறு மணியாகியும் கோவில் திறக்கப்படவில்லை.

கோவில் சாவி வைத்துள்ள பெரியவர் விரைந்து வந்தார்  இன்றைக்கு அய்யர் வரமாட்டார் என்று சொல்ல
விளக்கு மட்டும் போடவந்தவர்கள் விளக்கு ஏற்றிச்செல்ல அர்ச்சனை அந்தபெரியவரே செய்தார்.
கருவறைக்கு வெளியிலே நின்றுகொண்டே பூவை  கருவறையின் உள்ளே இருக்கும் தெய்வத்தின் மீது தூக்கி எறிந்தார்.
ஏற்கனவே காய்ந்த பூக்கள் சிதறிகிடந்தது. வெளியில் இருந்தவாறே தேங்காய் உடைத்து சூடம் காட்டினார்.
மந்திரங்கள் கிடையாதுஅர்ச்சனை முடிந்தது.

அய்யர் கட்டுபாட்டில் உள்ளகோவில்களில் வருமானம் அதிகம் உள்ள தெய்வங்களுக்கு சிறப்புகவனம் செலுத்தப்படும். வருமானம் வராத கோவில்களின் தெய்வங்களுக்கு அய்யர்களின் பராமுகம் நிரந்தரம்

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்.

Saturday, June 25, 2011

ஜென்னும் கபீரும் உங்கள் புரிதலுக்கு...



பாசிபடர்ந்த பாறைப்பிளவினூடே
தன்னுடைய வழியைத் தேர்ந்துகொள்ளும்
சிற்றோடைபோல்
அமைதியாகத் தெளிகிறேன்; துல்லியமாகிறேன்.
                                                      
                                                           (ஜென் கவிஞர்)


என் இறைவன்
என்னவிதமானவரென்று தெரியவில்லை.

அவரிடம்
உரக்கக் கத்தி வேண்டுகிறார் முல்லா?

சிறுபூச்சி நகரும்போது
அதன்மெல்லிய கணுக்கால் ஓசையைக்கூட
அவரால் கேட்கமுடியுமே..

உனது ஜபமாலையை உருட்டி
மந்திரத்தை உச்சாடனம் செய்
உனது இறைவனின் சின்னத்தை
நெற்றியில் தரித்துக்கொள்
சடைமுடியை
நீட்டிவளர்த்துக்கொள்

எனினும்
உன் இதயத்துக்குள்ளிருக்கிறது கொடூர ஆயுதம்
உனக்குள்
எப்படியிருப்பார் இறைவன்?

                                                                     ( கபீர்)

Friday, June 24, 2011

தேவையும் பாதையும்



நடந்து
களைப்புறுகையில்
நீள்கின்றபாதை
இன்னமொரு
புதிய பயணத்தை
காட்டியப்படியே
நீள்கிறது
வாழ்வின்  தேவைகள்
முடிந்ததாய்
நினைக்கையில்
அறியாமல
உள்நுழையும்
ஓர்புதிய தேவைக்காக
வாழ்வு நீள்கிறது.


LinkWithin

Related Posts with Thumbnails