Showing posts with label சாமி. Show all posts
Showing posts with label சாமி. Show all posts

Sunday, October 03, 2010

அய்யோ சாமி….



நண்பருடைய  உறவினர் துக்கத்திற்கு  மாயவரம் வரை  சென்று குடந்தை வழியாக  திரும்பி கொண்டிருந்தோம்.
குடந்தையின் உள்ளே சொந்த வேலையின் காரணமாக  நகரின்
பல  வீதிகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை.

ராமசாமி கோவில்  வீதியில் அமைந்து்ள்ள  பஞ்சலோக சிலை தயாரிப்பு கடையில்  சுவாமி சிலைகள்  கண்காட்சியில் வைப்பது போல் வரிசையாக வைந்திருந்தார்கள்.

ஒவ்வொரு சிலையாக  பார்வையிட்டு கொண்டே நகர்ந்தேன்.  கடையின் உட்புறம் கண்களை  நகர்த்த   அய்யோ…சுவாமி..
மனசு கத்தியது.

அந்த மனிதன் கால்களுக்கிடையே  நடராஜர்  அல்லாடி கொண்டிருந்தார். ரம்பம் வைத்து  நடராஜரின் தோல்புறம் சரிசெய்து கொண்டிருந்தார்.

வண்டி நகர்ந்தது அடுத்தகடை யையும் உள்நோக்க    அங்கே  பிள்ளையார் சிறு  உளி வைத்து சுத்தியலால் அடிக்கப்பட்டு கொண்டிருந்தார்.

எலுமிச்சை  , தயிர் , பன்னீர், இளநீர் , மஞ்சள் தூள் மேலும் திருநீறு  ஆகியவற்றால் அபிசேகம் செய்யும் திருமேனியா இது.

ஆயிரம் ஆயிரம் ஜோடி கைகள் ஆண்டவனே …ஆண்டவனே..மனமுருகி வணக்கம் செய்யும் திருமேனியா  ஒரு மனிதனின் கால்களுக்குள் அகப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த மனிதன் பிள்ளையாரை   தூர வைத்து கண்களால் அளவிட்டான். ஏதோ முனுகினான்…

திரும்பவும் அவனது கால்களுக்கிடையே   பிள்ளையார் உட்கார்ந்து கொள்ள..

உளியால் செதுக்க ஆரம்பித்தான். அய்யோ   சாமி….

Friday, May 07, 2010

நீங்க சாமிய பாத்துருகீங்களா.

ஓரே இடத்தில் உழன்று கொண்டிருந்ததால் மனதுக்கு சிறிது மாற்றம் தேவைப்பட்டது. நண்பர்களுடன் முடிவு செய்து எங்கள் ஊர் பக்கத்து ஊரில் இருக்கும்  பெரியவர் ஒருவரின் ஜீவசமாதிக்கு சென்றுவருவோம் என்று முடிவு செய்து அந்த ஊருக்கு சென்றோம்.          

முதல்தடவை சென்றபோது அந்தஇடத்தின் அமைதி  மிகுந்த மனநிம்மதியை கொடுக்க அடுத்த பத்துநாட்கள்  கழித்து திரும்பவும் அதே இடத்திற்கு சென்றோம்.

இந்தமுறை முக்தி அடைந்த பெரியவரின்  கதையை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அந்த ஊர்  முதியவர் ஒருவரை
அணுகினோம்.

தம்பி எனக்கு வயசு எண்பத்தஞ்சு…

அய்யா நீங்க  சாமிய பாத்துருகீங்களா.

நல்லா பாத்துருக்கேன் பெப்பர் மி்ட்டாய் இல்ல அப்ப டின்லு தான் வரும்  அத வாங்கிட்டு பாக்கறவங்களுக்கு ஒரு கைப்பிடி கொடுக்கும் தம்பி.

அய்யா இங்க வந்தவரா  பொறந்தவரா

இல்ல தம்பீ பக்கத்து ஊருல மாடு மேய்ச்சுகிட்டு இருந்திச்சு ஒரு நாள் ரொம்ப நேரம் தூக்கிட்டுன்னு
வேலைக்கு வைச்சிருத்தவன் அடிச்சான் .

அந்தநேரம் பாத்து எங்க ஊரு லேந்து போனவங்க  ஏம்பா அடிக்கிறேன்னு கேட்டு அத அழச்சிட்டு வந்துட்டாங்க  அதிலேந்து அது இங்கதான்.

அது தான்  அந்தா இருக்கு பாருங்க அந்த முருகன் கோயில கட்டிச்சு அப்புறம் கிராமத்துல சேந்து பெரிசா கட்டினாங்க.

இங்க ரெண்டு குடும்பம் இருந்தீச்சு  எனக்கு தெரிஞ்சு பத்துவேலி நெலம்   அவுங்களுக்கு சாமிய பாத்து சாமியாவது   பூதமாவுது  ரொம்ப கடுப்பு ஏத்திகிட்டே இருந்தாங்க..

சாமி  போறப்ப  …நீங்க உருப்புடமா போவீங்க சொன்னிச்சு இன்னிக்கு  பத்து மா நெலம் கூட இல்ல தம்பீ.

அப்புறம் எங்கபோச்சு ங்க சாமி..

சாமியா அப்படி சொல்லும் சந்தேகம் எங்களுக்கு ஆனாலும் கேட்கவில்லை.

இந்த ஊரு கொடுத்து வைக்க ல  எங்கேயோ மெட்ராசுக்கு பேறவழியாம் அங்க போயி சமாதி ஆயிடுச்சு.

அது வாழ்ந்தது இங்க சமாதி அங்க தான் தம்பி.

வெளியூர் ஆளுங்க வந்து என்ன என்னம்மோ செய்யுறாங்க தம்பி  எல்லா பெரிய ஆளுங்க..

அத நல்லபடியா கவனிச்சு வைச்சிருந்தா இந்தஊரு  இன்னநேரம் எங்கேயோ தம்பி .

வர்றேங்க என்று விடைபெற்று
நிறைய சந்தேகங்களுடன் அந்த இடம் அகன்றோம்.

Sunday, January 11, 2009

நம்பிக்கை தோன்றுவதில்லை தோற்றுவிக்கப்படுகின்றன.

கோயிலுக்கு போவல..

போ மாட்டியா..

எப்பா..அங்க ஒரு சாமி..அங்க ஒரு சாமி..

அந்த சாமி இருக்கலப்பா..கும்புட்டியா..

கும்புடலயா..

கும்புடலேன்னா என்னடா தம்பி பண்ணும்.

யான முட்டும்..

எப்ப..எப்பா யான முட்ட போவுதே..

உன்ன..என்ன யான முட்டாதே..

நா கும்புட்டேன் அந்தசாமி..

கல்லு பாம்பு இருக்குல்ல அது கொத்திபுடும்.

கல்லு பாம்புன்னா ..

கல்லுல இப்படி போவுல்ல அந்த பாம்புதான்.

இரண்டரை வயது பையன் தன்னுடைய அப்பாவிடம் நிகழ்த்திய உரையாடல்.
நம்பிக்கை தோன்றுவதில்லை தோற்றுவிக்கப்படுகின்றன.

Saturday, January 03, 2009

இலட்ச தீபம்

இந்தா போட்டுருக்கு பாருடி ..

டோக்கன் இலவசம் போர்டு..

வாடி.. வாடி .. இந்த வழியாதான் போவணும்.

சீக்கரம் வாடி..

இலவச டோக்கன் வாங்க விரைவாய் நடந்த பெண்கள்.

சார் .. டோக்கன் வேணுமா.. டோக்கன்..

மடிப்பு களையா உடையுடன்தம்பதி எவ்வளவு?

எதாச்சும் செலவுக்கு கொடுத்துட்டு போ சார்..

கைமாறும் பணமும் டோக்கனும்.

இந்தம்மா .. நான் கோயிலு ஸ்டாபு.. இவங்க தெரிஞ்சவங்க..பத்து விளக்கு ஏத்தணும்.

இல்ல சார் .. மூனு விளக்குதான் அலவுடு சார்.

நான் கோயில் ஸ்டாப் சொல்லேறேன்..அஞ்சு விளக்காவது ஏத்தணும் இவங்க..

சார் அதட்டாத.. நானும் கோயிலு ஸ்டாபுதான்.. இப்படி அதட்டற..

சரி..சரி ஏத்தவிடு இவங்கள..

போம்மா..போம்மா .. நிக்காத ..நிக்காத

போ..போயிட்டே இரு.. பிரசாதம் வாங்கிட்டு சாமி பாத்தவங்க போங்க..

இந்த சாமி. .

கைமாறும் இருபது ரூபா நோட்டு..

இந்தாங்கோ …விபூதி பொட்டலம் பூ ஒரு எலுமிச்சை பழம்.

வர்றேன் சாமி.. வாங்க..

என்னங்க விசேசம் கோயில்ல..

என்னமோ லட்ச தீபம் ஏத்துறாங்க..

எதுக்குங்க...

தெரியலிங்க..நீங்க எதுக்கு வந்தீங்க..

எல்லா வந்தாங்க ..நானும் வந்தேங்க..

அப்ப சரிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails