மனதில் தானாய்
தோன்றும் நினைவுகளில்
பல பேரது வாசமாய்
அவர்களின் நினைவுகள்
மனதில் தோன்றியப்படி…
மகிழ்ச்சி வருத்தம்
கோபம் துன்பம்
நினைவுகளில் இயல்பு
என் செயல்களில்
என் தொடர்பு இல்லாத
எண்ணச் சிதறல்
புலன்களின் தொடர்புகள்
அறுந்துபோய்
தன்னிச்சை இயந்திரமாய்
புலன்களின் வெளிப்பாடு
பார்த்து சிரிக்கும்
குழந்தைக்கு கூட
பதில் புன்னகை புரியாது
பலபேரது எண்ணங்களை
மனதில் சுமந்தப்படி
உண்பதும் உடுப்பதுமாய்
வாழ்வு.
மாயம் செய்த
என் மனம்
இரவின் வெளிச்சம்
பழகிய கண்கள்
கயிறா..
பாம்பா..
அசைவு தெரியவில்லை
கயிறு
நினைத்த மனம்
வளைந்து நெளிந்து
பாம்பு
மாறிய மனம்
விவாதங்கள்விரைவாய்
தொட்டுப்பார்
தொடாதே
முன்அறி
அனுபவி
அமைதி இல்லாநிகழ்வாய்
அச்சமாய் என்மனம்

மனம் சொல்ல
கண்களில்
தெரிந்த பயம்
மனம் சொல்ல
கண்களில்
தெரிந்த மகிழ்ச்சி
மனம்
போ என்றவுடன்
போக துணிந்த
கால்கள்
கட்டளைகள்
கிடைத்தவுடன்
செயல்களில்
புலன்களின் ஈடுபாடு
நிற்க துணிந்த
மனம்
சாக துணிந்த
மனம்
மனம் மட்டுமே
வாழ்வாய்
மனம் தான் என்ன?