Showing posts with label மாணவன். Show all posts
Showing posts with label மாணவன். Show all posts
Thursday, April 23, 2015
Wednesday, January 05, 2011
மது மாணவர்களையும் அடிமையாக்கும்.
அவன் அம்மா பிள்ளை . தனக்கு தெரியாதவர்கள் எதிரில் நின்றாலே மௌ ன ம் தான் அவன் மொ ழி. . விபரங்களுக்காக வினாக்கள் தொ டுத்தால் ஒரு சில வார்த்தைகளில் பதில்.
அ ந்த ஊ ரில் பேர் வாங்கிய ஆ ங்கிலபள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொ ண்டிருந்தான்.
இளமையின் துவக்கம் வெளிஉலகத் தொட ர்புகளுக்காய் வெளிவர அவன் வந்து சேர்ந்த இடம் குடியும் புகையும் உள்ள நண் பர்கள் தான்.
வீட்டில் அவன் அமைதி பார்த்து இவன்தான ய்யா பிள்ளை என்று வியந்தவர்கள் உண்டு.
எப்பொழுதும் போல அன்றைக்கும் பள்ளி கிளம்பி நண் பர்களுடன் குடிக்க ஆ சைப்பட்டு மதுவை தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் கொ ண்டு செல்ல எப்படியோ வகுப்பாசிரியை தெரிந்து பள்ளி முதுல்வருக்கு விசயம் சொல்லப்பட்டது.
விசாரணை யின் போ து கொ ஞ்சமும் பயம் கொ ள்ளாது டி.சி. கொடுங்கள் என்று மாண வன் கேட்டது பெற்றோ ர்களுக்கு தெரிவிக்கப்பட ...
கெஞ்சிய நிலை மையில் மன்னிப்பு கோ ரி பள்ளி முதல்வரிடம் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதப்போகும் தன்னுடைய பையனுக்காக நின்றுகொ ண்டிருந்தார்கள்.
ஒரு சர்வே முடிவு
இந்தியாவின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளில் சுமார் 45 சதவீதம் பேர் மது குடிப்பது “சர்வே” யில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 படிப்பவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
பிளஸ்-2 மாணவர்கள் எப்படி மதுவுக்கு அடிமை யானார்கள் என்பதற்கும் இந்த சர்வேயில் விடை கிடைத் துள்ளது. சமூக மாற்றங்களால் மாணவர்களிடம் ஏற்பட் டுள்ள அதிக பணப்புழக்கம், பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவது, படிப்பால் ஏற்படும் மன அழுத்தம், புதிய வகை கொண்டாட்டங்கள் போன்றவை மாணவர்களை குடிகாரர்கள் ஆக்கி விடுவதாக தெரியவந்துள்ளது.
15 முதல் 19 வயதுக்குள் தான் மாணவர்கள் குடிகாரர்களாக மனம் மாறுகிறார்களாம். பீர் மட்டும் குடிக்கலாம் தப்பு இல்லை என்ற தவறான வழிகாட்டுதல் மாணவர்களை மதுபான பழக்கத்தை உண் டாக்குகிறது.
என்ன காரணத்தை அடிப்படையாக வைத்து மாணவர்கள் மது குடிக்கி றார்கள் என்பதும் சர்வே மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத் தம் ஏற்பட்டு மனம் அப்செட்டாகும் போது மதுவை தேடிச் செல்வதாக 32 சதவீதம் இளைஞர்கள் கூறி உள்ளனர். தனிமை காரணமாக மது குடிப்பதாக 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Wednesday, August 18, 2010
ஐந்தாம் வகுப்பு சிறுவனுடன் நேர்காணல்
தம்பி அந்த கோயில்ல உக்காந்து இருக்கேன் வந்து பிக்கப் பண்ணிக்க என்று தன் நண்பனிடம் சொல்லிவிடைப்பெற்று அங்கிருக்கும் கோவில் கட்டையில் அமர்ந்தான்.
நண்பன் வரும் வரை பொழுது போக வேண்டுமே என்று கைப்பேசியை வைத்து நோண்ட ஆரம்பித்தான். இதை கவனித்து கொண்டிருந்த மாடுமேய்த்து கொண்டிருந்த சிறுவன் கொஞ்ச கொஞ்சமாய் அவனை நோக்கி முன்னேறினான்.
அவன் சிறுவனை நோக்கி திரும்புகையில் வாயெல்லாம் பல்லாக புன்னகை செய்தான்.
கைப்பேசியில்உள்ள நிழற்படகருவியினால் அவனை படம் பிடிக்க வெட்கமாய் சிரித்தான்.
அவன் சிறுவனுடன் நேர்காணல் நடத்த ஆரம்பித்தான்.
எத்னாவது படிக்கிற…?
அஞ்சாவது.
எங்க ?
அதே அங்க என்று பக்கத்திலிருக்கும் பள்ளியை காண்பித்தான்.
உம் பேரு ?
பிரவீன்.
டீச்சரா.. சாரா உனக்கு…
டீச்சரு..
எத்தன டீச்சரு உம்பள்ளிகூடத்துல..
ஆங்..எங்க டீச்சரு பேரு லித்திகா.. இன்னொரு டீச்சரு..
இன்னொரு டீச்சரு பேரு..
தெரியாது.
100 ல்ல 99 போச்சுன்னா எவ்வளப்பா..
சில நிமிடங்கள் மௌன ம்.
என்னப்பா எவ்வளவு..
98 .. இது சிறுவன்.
என்னது 98 ....? அப்ப 50 ல்ல 29 போச்சுன்னா..
வினாடியும் தாமதிக்காது தெரியல என்றான்.
சினிமா பாப்பியா ?
பாக்கமாட்டேன்.
எந்த நடிகர புடிக்கும்?
அர்சுன்.
நடிக ?
நடிகன்னா...
அதான் நடிகரோட சேந்து ஆடுவாங்களே
சே..அதெல்லாம் புடிக்காது.
சாப்பாடு கட்டிட்டு போயிடுவியா...
பள்ளிகூடத்துல போடுவாங்க...
உனக்கு பத்துமா...
நான் நிறைய வாங்கிப்பேன்.
பள்ளிகூடத்துல யூனிபார்ம் உண்டா..
உண்டு நான் இன்னும் எடுக்கல..
ஏன்?
அப்பா வேல பாத்த எடத்துல காசு வல்லேன்னு சொன்னாங்க..
லீவு நாள்ல என்ன வௌ டுவ..
கபடி..
யோவ் வாய்யா என்று நண்பன் கூப்பிட்டவுன் சிறுவனிடம் விடைப்பெற்று பறந்தான்.
Subscribe to:
Posts (Atom)
