Showing posts with label முயற்சி. Show all posts
Showing posts with label முயற்சி. Show all posts

Sunday, January 20, 2013

ஊ னம் ஓர் பொருட்டல்ல…


சரியான வழிகாட்டுதலில் ஊ னம் ஓ ரு பொ ருட்டல்ல வாழும் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துகொள்ளமுடியும் .

அவர்களின் எண்ணங்களை சரியானமுறையில் மாற்றியமைக்க கூடிய ஓர் நபர் இருந்தாலே ஊ னம்முற்றேருடைய வாழ்க்கை மாறத்தொடங்கிவிடும்.


அப்துல்கலாம் உரை வருமாறு: நாம் மின் விளக்கைப் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். விமானத்தைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், தொலைபேசியைப் பார்த்தால் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் எப்போதோ வாழ்ந்து மறைந்தாலும் இப்போதும் அவர்களை நம் நினைவில் வைத்துப் போற்றுகிறோம். அவர்கள் அவ்வாறு போற்றப்பட அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த தனித்துவத் திறமைதான் காரணம்.
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்துவத் திறமை உள்ளது. நாம் அந்த தனித்துவத் திறமையைக் கண்டறிந்து நம்மில் அத்திறமையை வளர்த்துக் கொள்ளப் போகிறோமா அல்லது எல்லோரையும் போல நாமும் சாதாரண மனிதர்களாக ஆகப் போகிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது.
நாமும் வரலாற்றில் இடம்பெற வேண்டுமானால் நமக்கான தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ச்சியான அறிவுத் தேடலும், கடின உழைப்பும் இருப்பது அவசியம். எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும் தளராத மனம் வேண்டும். இந்த நான்கு குணங்களும் நமது வெற்றிக்கு மிகவும் அடிப்படையானவை.
எல்லோராலும் வெற்றி பெற முடியும்: நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையில் தினமும் ஏராளமான மாணவர்களைச் சந்திப்பது வழக்கம். ஒருநாள் ஆந்திரத்திலிருந்து மலைவாழ் மாணவர்கள் குழுவாக வந்திருந்தனர். அவர்களிடம் உங்கள் லட்சியம் என்னவென்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு லட்சியத்தைக் கூறினர். அவர்களுடன் வந்திருந்த ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற மாணவர், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வருவதே என் லட்சியம் என்று கூறினார். உயர்ந்த லட்சியம் இருந்தால் உனது இலக்கை அடையலாம் என்று அந்த மாணவனை நான் வாழ்த்தினேன்.

 10-ஆம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 98 சதவீத மதிப்பெண்களும் பெற்ற அந்த மாணவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள எம்.ஐ.டி. நிறுவனத்தில் கணினி தொழில்நுட்ப படிப்பு பயின்று வருகிறார். அந்த நிறுவனத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனால், சர்வதேச அளவில் நடந்த போட்டித் தேர்வில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதன் மூலமே அங்கு படிப்பில் சேர முடிந்தது.
அமெரிக்காவில் படிப்பு முடித்ததுமே இந்தியாவில் வேலை தயாராக இருப்பதாக அந்த மாணவரின் படிப்புக்கு உதவிய கம்பெனியின் மேலதிகாரி அந்த மாணவருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இந்தியாவின் பார்வையற்ற முதல் குடியரசுத் தலைவர் என்ற இடத்துக்கு வர இயலாவிட்டால் உங்கள் நிறுவனம் அளிக்கும் வேலைவாய்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று அந்த மாணவர் பதில் எழுதினார். 
ஆந்திர மாநிலத்தில் மலைவாழ் குடும்பத்தில் பிறந்த, அறவே பார்வையற்ற ஒரு மாணவரால் இத்தகைய உயர்ந்த நிலைக்கு உயர முடிகிறது என்றால் அந்த மாணவர் கொண்டிருக்கும் உயர்ந்த லட்சியமே அதற்குக் காரணம். ஆகவே, உயர்ந்த லட்சியமும், கடும் உழைப்பும் இருந்தால் நாம் யாராக இருந்தாலும் நம்மால் நிச்சயம் வெற்றி பெற இயலும். 

Thursday, September 23, 2010

முயற்சி



கை அழுத்திய விசையில்
நீரினுள் 
காற்றடைத்த பந்து

பந்தினுள்ளிருந்து
வெளிவர வழிதேடும்
காற்று

கிடைக்கும் வாய்ப்பில்
பந்து மேல்வரும்
அழுத்திய  விசையால்
திரும்பவும் நீரினுள்

விசைக்கு
எதிர் விசையாய்
கட்டுபாடு
சுதந்திரமின்மை

காலம் வரும்
எதிர்விசை குன்றும்
விழிப்பாய்
காற்றடைத்த பந்து


Monday, May 03, 2010

எந்ததுறையிலமவுசு அதிகம்



கணினி துறையில்வேலைப் பார்த்துவரும் நண்பர் ஒருவரிடம்  பேசி கொண்டிருந்தோம்.  இன்னொரு நண்பர்  டியூசன் சென்டர் நடத்திவருகிறார்.

அவரிடம் அந்த நண்பர் கேட்டார் இப்ப எல்லாரும்  சாப்ட்வேர்  ..சாப்ட்வேர் அப்படின்னு சொல்லுறாங்க..  இப்ப அதோட மவுசு கம்மி வருங்காலத்துல எந்ததுறையிலமவுசு அதிகம்  அப்படின்னு கேட்டாரு.

இப்ப நான் படிச்சு தெரிஞ்சிகிட்டவரையிலும் சோலார் எனர்ஜி ,   காற்றாலை மின்சாரம், இயற்கை விவசாயம்போன்ற துறைகளில் நல்லதொரு வாய்ப்பு உள்ளது.

நீங்க தான் உங்க மாணவர்களுக்கு   சொல்லனும்.நாங்கசொல்லறதுக்கும் நீங்க சொல்லற வித்தியாசம் நிறைய உண்டு. இன்னொரு கொடுமையான விசயம் என்ன அப்படின்னா ஆசிரியர் பயிற்சி முடிஞ்சு வாத்தியார் ஆன  பெரும்பாலானவர்கள் உலகில் நடக்கும் எந்த மாற்றங்களை அப்டேட் செய்து கொள்வதில்லை.  இவர்கள் எப்படி மாணவர்களுக்கு சரியான வழியை காட்டிவிடமுடியும்.

நாம தான் ஏதோ நம்மால் ஆன முயற்சி செய்துபார்க்கவேண்டும்  என்று கூற வேலை  ..வேலை என்று வேலை கிடைப்பதற்குமுன் அதற்கு உள்ள முயற்சி வேலை கிடைத்த பிறகு அதற்குண்டான அர்பணிப்பு உணர்வு மிகவும் கம்மியாக உள்ளது.

போலீஸ்காரர்கள் யாரும் வேலை கிடைத்தபிறகு உடற்பயிற்சி செய்வதே கிடையாது வேலை கிடைப்பதற்கு முன்  எப்படியெல்லாம் தன் உடலை வருத்தி கொண்டிருப்பார்கள் தெரியுமா..

மாற்றங்கள் தேவை.  அந்த மாற்றங்களை உங்களை போன்ற ஆசிரியர்கள் தான்   விதைக்க வேண்டும் என்று கூறினார்.

Sunday, October 18, 2009

“ முயற்சிகள் தோற்கலாம் முயற்சிக்கத் தவறலாமோ? ”


அன்றைய தினம் அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். விசயம் என்னவென்று விசாரிக்க அவனுக்கு முப்பதாயிரம் பணம் தேவை. திடீர் தேவைக்கு அணுகிய இடத்தில் தருகிறேன் என்று சொல்லி தரமுடியாமல் போய்விட்டது.

இவன் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றம் அடைந்தான். மனதில் சோர்வும் வந்தது. அடுத்த முயற்சியை

ஆர்வம் இல்லாமல் மேற்கொண்டான். அதுவும் தவறிபோக அடுத்த முயற்சி்க்கான செயலை செய்ய துணிவில்லாமல் இருந்தான்.

ஒரு நாள் காலை கோவிலுக்கு போயிருந்தான் அங்கு துண்டு வாசகம் அச்சடித்து ஒட்டியிருந்தார்கள். “ முயற்சிகள் தோற்கலாம் முயற்சிக்கத் தவறலாமோ? ” என்று இவனுக்குள் சிறிய மாறுதல்.

அந்த வாசகத்தை ஏற்றுகொண்டதாய் அவன் முகம் உணர்த்தியது.

LinkWithin

Related Posts with Thumbnails