Tuesday, September 20, 2011

புகைப்பட தொகுப்பு














இந்தியா ஒளிர்கிறது.




தினசரியில் படித்த செய்தி இது.  டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய 22 கோடி மதிப்புள்ள தங்க கார் மாடல.
ஒருபக்கம் ஆச்சரியம் ஒரு பக்கம் வேதனையாக தான் இருந்தது.

இந்தியா ஒளிர்கிறது…..

ஏழைகளின் தேவைகள்  என்று எவ்வளவோ இருக்க 22 கோடியில் கார். இந்த காரைக்காட்டி இன்னும் எத்தனை கார்களை விற்கபோகிறார்களோ தெரியவில்லை. எல்லாம் வியாபாரம் லாப நோக்கு...

இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை ...நிறைய பேண்ட் சட்டை போட்ட ஏழைகள் .  இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் வித்தியாசம் அதிகமாகிவிட்டது.

கடனால் தற்கொலை  என்று படிக்கும் அதே நேரத்தில் இதுபோன்ற ஆடம்பரங்களை யும் நாம் பார்க்க கொடுத்து வைத்துள்ளோம்.

இது தான் இந்தியா .

Saturday, September 10, 2011

எறும்பு



சிறுவாய்க்கால்
கரையோரம்
ஊ ர்ந்த எறும்பு
அங்கும் இங்கும்
அலைந்தபடி
தன் இரையைத்தேடி
பெருகெடுத்த நீர்
வாய்க்காலில்
விரைந்துவர
நீருக்குள்
அடித்து செல்லப்பட்ட
எறும்பு
தன் உடம்பை
நீரின் போக்குக்கு
விட
உருண்டு புரண்டு
தனக்கு ஓர்
மர க்கிளையோ
மண் மேடோ  
கிடைக்கும் வரை
தன்போக்கில்…..


LinkWithin

Related Posts with Thumbnails