Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Wednesday, December 09, 2015

இன்று காலையும் கண்முன் விரிந்த காட்சிகளும்


மழை முன்னறிவிப்பு
பள்ளிகளுக்கு விடுமுறை

பத்து நாட்களாய்
கரு மேகங்களுக்கு
சிறைப்பட்ட சூரியனின்
வருகையால்
பரவிய வெளிச்சம்

காற்று வாக்கில்
போகும் மேகம்
தூவும் மழைச்சாரல்

ரசித்து நனைந்தபடியே
செல்லும் மக்கள்

விளையாடும் சிறுவர்கள்
ஆகா...
குரங்களின் வருகை
குதுகலமாய் சிறுவர்கள்

சிவப்பு முண்டாசு
பொண்டாட்டியுடன்
கடைத்தெரு போகிறார்

ஓட்டமும் நடையுமாய்
அம்மா சொன்ன
வேலை முடித்து
வீடு நோக்கி செல்லும்
சிறுமி

சிந்தனை முகமாய்
முஸ்லீம் பெரியவர்
சைக்கிள் ஓட்டுகிறார்

தலைச்சொரியும்
சட்டையில்லா
துப்புரவு தொழிலாளி

யார் வீட்டு
கொட்டடியில் இருந்து
வெளியேறும்
ஆடுகளும் மாடுகளும்

இன்று காலையும்

கண்முன் விரிந்தகாட்சிகளும்.

Sunday, November 29, 2015

கவிஞர் மு.மேத்தாவின் ஆகாயத்திற்கு அடுத்தவீடு


ஒருவருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
உன்னிடம்  கொண்டுவந்து
சேர்த்துவிடும் என்னை
இந்தக் கடிதம்!

எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என்கடிதத்தை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!

எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னை
எட்டிப் பார்க்கிறேன் நான்!

காற்று உன் வீட்டுக்
கதவுளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுப்படுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!

ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக

வாரந்தோறும்
வந்துபோகின்றன
ஞாயிற்றுக்கிழமைகள்...
வருவாயா நீ?

பூங்கொத்து வேண்டாம்
வாடாமல் இருக்கும்
உன் வார்த்தைகள்...

புகை வண்டியில் உன்னை
வழியனுப்பும்போது
கேட்பேன்.
“இப்போதாவது
என்னை
என்னிடம் விட்டுச் செல்!”

அவசியம் அனுப்பிவை
உன் திருமண
அழைப்பிதழை...
பாிசு விழுந்தது
யாருக்கென்று
பார்த்துக் கொள்கிறேன்!

Saturday, February 23, 2013

இதுவல்ல நேரம்






கரைந்த நிமிடங்களில்
தான்
என்னை தேடுகிறேன்
தவறுகள்
சரி பார்க்கப்படுகிறது
நிகழ்காலம்
விழிப்புணர்வு
அற்று
நாளைய பொழுதுகளில்
திரும்பவும்
சரிப்பார்க்க
கரைந்த நிமிடங்களில்
தான்
என்னை தேடுகிறேன்.

Tuesday, February 12, 2013

வெறியாட்டு


காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

நன்றி - தினமணி

Saturday, December 03, 2011

கட்டுபாடு



கட்டுபாடுகளினால்
சிதைந்த வாழ்வு
கட்டுபாடுகளினால்
வளமானது
நோக்கங்கள் தான்
சிதைவும்
வளர்ச்சியும்
உண்டாக்க
கட்டுபாடு இயற்கையாய்….

Saturday, September 10, 2011

எறும்பு



சிறுவாய்க்கால்
கரையோரம்
ஊ ர்ந்த எறும்பு
அங்கும் இங்கும்
அலைந்தபடி
தன் இரையைத்தேடி
பெருகெடுத்த நீர்
வாய்க்காலில்
விரைந்துவர
நீருக்குள்
அடித்து செல்லப்பட்ட
எறும்பு
தன் உடம்பை
நீரின் போக்குக்கு
விட
உருண்டு புரண்டு
தனக்கு ஓர்
மர க்கிளையோ
மண் மேடோ  
கிடைக்கும் வரை
தன்போக்கில்…..


Wednesday, August 31, 2011

சுயம்







உள்ளிழுத்து கொள்கிறேன்

என்சுயம் ஒவ்வாத

நடக்கமுடியாசெயல்களில்

மௌனமாய் விலகுகிறேன்

நீ வாழ்

நானும் வாழ்கிறேன்

எதிர்ப்பதில் வாழ்வா..!?

என் சுயம்

உடைக்கப்படுகிறது

உணர்வுகள்சிதைக்க

எனது வாழ்வில்பூக்களா…

முடியாத நேரங்கள்

நாளை கிடைத்துவிடும்

நம்பிக்கையில்

பொறுக்கிறேன்

சுயம் அழிகிறது

நான்

என்குடும்பம்

என்பிள்ளை என்று

காலங்கள்

நீண்டு கொண்டே யிருக்கிறது

சக்கையாய் வாழ்வும்

நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.

Tuesday, December 16, 2008

எதார்த்தம் என்னவோ கடினம் தான்

காலங்கள் மாறுகிறது
சொல்லியபடி செயல்
காலச்சுழற்சியில்
காணாமல் போகும் மாயம்
எதிர்கால கனவுகள்
மெய் அல்லது பொய்
கிடைத்த வாய்ப்புகள்
கொடுக்கும் நம்பிக்கை
நானும் ஒரு
வெற்றியாளனாய்
கடிவாளம் அணியா
குதிரையாய்
எதார்த்தம் என்னவோ
கடினம் தான்
நேற்று தோற்றவை
நாளைய கனவாய்
இன்றைய நாளை
மறந்த.. என் மனதில்

Monday, December 08, 2008

பகலும் இரவும் வரும் போகும்

கேள்வி குறியாய்
எல்லைகளின் பாதுகாவல்
பிய்ந்து போன
வேலிகள்

உடைந்து நிற்கும்
முன்சுவர்
மேற்கூரை இல்லா
தனித்து நிற்கும்
கல்தூண்கள்

சுண்ணம் பெயர்ந்துபோன
சுவர்கள்
புது ஓவியமாய்
மழை துளிகளின் கோடுகள்
உட்புற சுவர்

உட்கார ஆட்கள் இல்லா
சாய்வு நாற்காலிகள்

மௌனம் கலைக்கும்
சிட்டு குருவிகள்
சத்தம்

சுருங்கிய தோலாய்
நடமாடும் உயிர்கள்

பகலும் இரவும்
வரும் போகும்.

Wednesday, December 03, 2008

அன்புள்ள காதலா அன்புடன் .... 2

எட்டி நிற்கும்
வாலிப கூட்டத்தில்
உன்னை தேடும்
எனது கண்கள்

ஆசைகள் ஆயிரம்
வெளியிடாத
எனது இதயம்

தொடக்கம்
உன்னிடம் இல்லா
எனது காதல்

ஓர் பிறவிகுருடனின்
சித்திர கனவுகளாய்
உன்நினைவுகளோடு



Monday, November 17, 2008

அன்புள்ள காதலா அன்புடன ...

பொங்கி பெருகும்
உனது ஆண்மை
உற்சாக துள்ளல்
உனது விழி
அமைதி
உனது முகம்
இதழ்களில் தவழும்
உன் புன்முறுவல்
நான் ரசிக்க
உன்னில் கண்டவை
சிரிக்க வைத்து
சிரித்து பேசி
நீ செல்ல
உனக்கு தெரியாமல்
உனை பின் தொடரும்
என் இதயம்
என்னில் தானா ...

Thursday, November 06, 2008

உனது வெற்றி உனக்கு உரியதே

உனது வெற்றி
உனக்கு உரியதே
எல்லோருக்கும் அல்ல
உன் தனிதன்மை
உனக்கு அமைத்த
வெற்றி
காலங்களால் நீ
வளர்ந்து
சூழ்நிலைகளால்
உரம் ஊட்டபட்டு
கனியும் நேரம்வந்தவுடன்
கிடைத்த வெற்றி
நான் எனும்
அகந்தையினால் அல்ல
ஆணவம் தலைமேல்
உட்காரும்
கவனி
உண்மை தெரியும்
அதுவரை நீ
நீயாக இருப்பாய்
புதுமைகள் மலர
உனை நோக்கு
உண்மையை அரவணை.

Sunday, November 02, 2008

பூகம்ப வேதனை

உயிர் அற்ற
சடலங்களுக்கிடையே
உயிர் தப்பிய
குழந்தையின் பசி
சோற்றுக்காய்
தாயை தேடும் கண்கள்
ஆதரவாய் உணவு நீட்டிய
பல கரங்கள்
குழந்தையின் கண்கள்
அன்பான தன்தாயின்
கரங்களை தேடி
வன்முறையாய் பசி
உணவு ஊட்டிய
கைகளில் அடக்கம்
அடங்கிய பசி
குழந்தையின்
அடுத்த தேடலாய்
தன்னோடு விளையாடும்
தம்பி பாப்பாவை நோக்கி
பூமி தாயின்
வினாடி கோபமாய்
குழந்தையின்
நிரந்தர வேதனை.

Tuesday, October 28, 2008

எல்லாம் நிகழும் எதுவும் நிகழும்

நடப்பது எளிது
எனில்நடந்து விடு
எதற்காக காத்து நிற்கிறாய்
நீ காத்திருக்கும் நேரம்
யார் யாரோ
உன் வழிப்பாதையில்
அவர்களைபின் தொடர்பவனாய் நீ
பின் தொடர்வது எளிது
வழி நடத்துவது கடினம்
பின்னால் திரும்பு
அனுபவங்கள்
உனை அரவணைக்க
முன்னால் பார்
எதிர்காலங்கள் வழியாய்
அந்த கணம்
நீ நடந்தாக வேண்டும்
இல்லையேல் இறந்த காலங்களுக்குள்
சிதைக்க படுவாய்
எதிர்காலம் என்னவோ
பொய் தான்
பொய் தான் உன்வாழ்வு
நட...
வழிபடும் தடைகளை
மெதுவாய் கட...
எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே


Saturday, October 04, 2008

ஒன்றாய் ஓரே உணர்வாய்

மகிழ்ச்சியை பரவ விடு
இயற்கையை அனுபவி
இயற்கையுடன் ஒன்றினை
நீயும் இயற்கையே ...
உனையே நீ
உண்டு பண்ண
வழி தெரியுமா ?
புதிர் அது
புரிந்து கொள்ள
முயற்சி செய்
புரிய நான் மறைய
நீ தெரிவாய்
இயல்பாய் இருப்பாய்
எதையும் ஏற்றுக்கொள்வாய்
அது இயற்கை
கொண்டுவர தெரிந்ததற்கு
கொண்டு போகவும் தெரியும்
ஆக்கம் வளர்ச்சி
அழிவும்
சுழலும் சக்கரங்கள்
உட்செல்வோம்
அதே வேளையில்
வேறு ஒன்றாய்
வெளிவருவோம்
உள்ளே வெளியே
ஓன்றாய் ஓரே உணர்வாய்







Saturday, September 27, 2008

கழுகுகளும் காக்கைகளும்

சிறுபள்ளம்
தேங்கியிருந்த குளத்துநீர்
மீனவர் வலைக்கு
தப்பி வந்த மீன்கள்
வானத்தில் வட்டமிடும்
கழுகளும் காக்கைகளும்
ஓர் கழுகின்
தொடர் முயற்சியில்
அதன் அலகுகளுக்குள்
சிக்கிய மீனின்
உயிர் போராட்டம்
துள்ளலாய்
வலிமைக்கு அடிபணிந்த
மீனின் முயற்சி தோல்வியாய்
வேட்டையாடிய
கழுகின் காலடியில்
மீன்
சுற்றியமர்ந்த கழுகுகள் ஆறு
உணவு தேவை
அருகில் அமர்ந்த காக்கைகள்
ஐந்து
அங்கும் இங்கும் பறந்தமர்ந்த
கழுகின் காலடியில் மீன்
உணவை உற்றுநோக்கும்
பார்வைகளுடன்
சுற்றியமர்ந்த கழுகுகளும்
காக்கைகளும்
உணவு போராட்டம்.





Monday, September 08, 2008

மனது



வேகம் என்னுடையது
வேகத்தின் மையம்
உன்னுடையது
நான்
நினைப்பது நடப்பது
எல்லாம் நீ
உனக்குள்ளே
எனை ஏற்றுக்கொள்
உன்னிடம் கேட்கிறேன்
ஏற்று கொண்டேன்
உறுதிமொழி கூடவே
கொஞ்சம் தயக்கம்
கொஞ்சம் நம்பிக்கை
கொஞ்சம் ஆணவம்
திரும்பவும் உன்னிடம்
எனை ஏற்றுக்கொள்ள
இது இயல்பு

நான் உன்னிலிருந்தே ...
உன்னில்தான் ...



Saturday, August 23, 2008

காலம் தவறா போராட்டங்கள்


நினைவுகளுடன்
காலம் தவறா
போராட்டங்கள்
எண்ணங்களின் சுழற்சியில்
என் வாழ்வு
வளர்ந்த விதமாய்
நினைக்கும் எண்ணங்கள்
தற்கால வளர்ச்சியில்
இணைந்து வளர
எடுக்கும் முயற்சிகளில்
எல்லாம்
எண்ண குழப்பம்
எண்ண சுழற்சி
மையம் மட்டும்
ஆடாமல் அசையாமல்
இயக்கமில்லா இயக்கமாய்
முரண்பட்ட எண்ணங்கள்
இன்னமொரு எண்ணகுழப்பமாய்
நினைவுகளுடன் ...




Tuesday, August 12, 2008

ஏமாற்றம் இயல்பாய்

வேகமாய் சுழன்ற
காற்று
திரண்டிருந்த கருமேகம்
காணாமல் போன மாயம்
தெளிவான வானம்
பெய்யும் மழையென
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய்
தவிர்க்க முடியா நிகழ்வாய்
நினைத்த நினைவுகள்
நிறைவேற்ற போட்ட
திட்டங்கள்
விரைந்தது வந்த
வாழ்வியல் சூழலில்

கனவாய்
நினைவு நினைவாய்
தேங்கி நிற்க
ஆசை நிராசையாய்
ஏமாற்றம் இயல்பாய்
தவிர்க்க முடியா நிகழ்வாய் .

Monday, August 04, 2008

நூல் பிடித்த மனது


தோன்றிய எண்ணங்கள்
நூல் பிடித்த மனது
இருக்கும்நிலை
மறக்கும் இயல்பு
சிறிய சத்தம்
வீட்டுக்குள் வாழும்
தவளை
இரவு பயணம்
முடித்து
திரும்ப வரும்
இடமாய் என் வீடு
ஒரு முறை
இரு முறை
பல முறை
வெளியே கொண்டு
விடுகிறேன்
அதன் போக்கு
மாறாமல் இருப்பிடம்
நோக்கிய
என் வீட்டு பயணம்
தோன்றிய எண்ணங்கள்
நூல் பிடித்த மனது
இருக்கும் நிலை
மறக்கும் இயல்பு.



LinkWithin

Related Posts with Thumbnails