Showing posts with label பாரம்பரியம். Show all posts
Showing posts with label பாரம்பரியம். Show all posts

Sunday, February 03, 2013

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்




அரிக்கன் விளக்கு
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
அம்மி
குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.
அண்டா
அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.
அடுக்குப்பானை
ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.
அடிகுழாய்
கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.
ஆட்டுக்கல்
வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.
அங்குஸ்தான்
தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஓட்டியாணம்
பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.
எந்திரம்
(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.
உரல்
வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.
உரி
(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.
குஞ்சம் - குஞ்சலம்
(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.
கூஜா
(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.
கோகர்ணம்
(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.
கொடியடுப்பு
ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.
சுளகு
வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.
தாவணி
(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.
தொடி
பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.
நடைவண்டி
(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.
பஞ்சமுக வாத்தியம்
கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.
பாக்குவெட்டி
(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.
பிரிமணை
(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.
புல்லாக்கு
மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.
முறம்
(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.
லோட்டா
நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.
மரப்பாச்சி
பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.
மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.
தொகுப்பு: சிவமானசா

நன்றி : தினமணி

Thursday, January 31, 2013

யசகானம்




சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆடப்பட்டு வரும் யஷ கானம் தென்னிந்தியாவின் தொன்மையான கிராமியக் கலைகளில் ஒன்று.

கர்நாடக மாநிலத்தின் பிரதான நாட்டியநாடக வடிவமாக இருந்தாலும் யஷகான நிகழ்ச்சிகள் வடகேரள மாநிலத்திலும்  ஆந்திராவிலும் கூட நடத்தப்படுகின்றன.

இந்து புராணங்களின்படி குபேரன் செல்வத்துக்குக் கடவுளாகக் கருதப்படுகிறார். அமரர் உலகில் வசிக்கும் குபேரனது ஊழியர்களான யஷர்கள் பாடும் பாடலே  யஷகானம் என்று சொல்லப்பட்டாலும் வேதங்கள்இதிகாசங்கள் மற்றும்புராணங்கள் போன்றவை சாமானிய மக்களை எளிதில் சென்று அடைவதற்காக பாடல் , ஆடல் மற்றும் வசனங்களுடன் உருவாக்கப்பட்ட கலையே யஷகானமாகும்.

தீயவை ஒழிந்து நல்லவை தெய்வ சக்தியால் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் என்றுமே நீங்காமல் நிறைந்துள்ளது. யஷகானம் ராமாயண மகாபாரத மற்றும் இந்து புராணக்கதைகளாகவும் அவற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளாகவும் அமைந்துள்ளது. ராவண சம்ஹாரம் கீசகவதம் மகாபாரத யுத்தம் பிரஹலாத சரித்திரம் சபரி பக்தி ஆகியவை பிரபலமான சில யஷகான கதைகள்.

யஷகானம் ஆலய மண்டங்களிலும் செல்வந்தர் வீடுகளிலும் ஆடப்படுகிறது. ரங்கஸ்தலா என்று அழைக்கப்படும் யஷகான மேடை மாவிலை மலர்கள் வாழைமரங்கள் தென்னை ஓலையின் குருத்துகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.

-காஷ்யபன்-

Monday, January 17, 2011

உலகபாரம்பரிய சின்னம் தாராசுரம் கோவில் பயணம்

சிற்பம்
12-ம் நூற்றாண்டில் இரண்டாம் ராசராசரால்  கட்டப்பட்ட   தமிழ்நாடு கும்பகோண  த்திற்கு அருகில் தாராசுரம் ஐராவதேஸ்வர ர் கோ யிலை    நோ க்கி  எங்களது  பொ ங்கல் பயண  ம்  அமைந்தது.


2004 ம் ஆண்டு உல க    பாரம்பரிய  சின்னமாக அறி விக்கப்பட   மத்திய அரசு இக்கோயிலை  கையில் எடுத்து பராம ரித்து வருகிறது.
சிதிலமடைந்த முகப்பு


நுழைவாயில்

வாயிலில் நந்தி சாமி

நுழைவாயில் கோபுரம்

உள்கோவில்

உள்கோபுரம்

மதில்மேல் நந்தி சாமி

சிற்பம்



நாங்கள் சென்றபொழுது கூட்டம்  அ வ்வள வாக  இ ல்லை  . வெளிநாட்டினார் வ ருகை  கணிசமாக  இருந்தது.

தனிமையில்....


சிற்பம்


சிற்பம்


கருவறையிலிருந்து நீர் வெளியேற...


சிங்க சிற்பம்


சாமி....!!!!???


ரசிப்பு


வருகை


விளையாட்டு


நேரம் நேரம் ஆ  க ஆக  கோ விலை   சுற்றியுள்ள புல்வெளிகளில்      திறந்தவெளி  வட்ட  கூட்டம் நடத்த  மக்கள்  கும்பல் கும்பலாக வர ஆ ரம்பித்தார்கள்.
சிறுவ ர்கள் சிறுமியர்களுக்கு சிறந்த விளை யாட்டு மைதானமாக  பயன்பட்டது.







Saturday, January 17, 2009

காணமல் போன கன்னியும் காளையும்

கூட்டத்துல யாராவது சின்னபசங்க இருந்தா வாங்கப்பா வந்து இதுல ஒரு சீட்டு எடுத்து கொடுங்க என்றார் ஊர்பெருசு.

டேய் தம்பி..போடா போய் எடுத்துக்கொடு இன்னொரு பெருசு.

உருட்டி போடப்பட்ட சீட்டுகளில் லபக் ஒன்றை எடுத்து ஊர் பெருசிடம் நீட்டினான் சிறுவன்.

பிரித்து பார்த்த பெருசு கதிர்வேல் பாண்டியர் பையன் நடராஜனுக்கு சீட்டு உழுந்துறுகுப்பா..

அவர் வீட்டுலதான் முதமாடு அவுக்கனும் கன்னிப்பொங்கலுக்கு என்று கத்தினார்.

அவங்க வீட்டுல மாடே இல்லேங்க என்னங்க செய்யறது என்று கத்தினார் கூட்டத்தில் ஒருவர்.

வழக்கம் போல எலுமிச்சபழமோ இல்லாட்டி கோழியே காவு வாங்கிட்டு மத்தவீட்டுகளேந்து மாடு அவுத்துட்டு மந்தைக்கு வாங்கப்போ..

கூட்டம் முடிஞ்சுது எந்த சண்ட சச்சரவும் இல்லாம சந்தோசமா மாடு அவுத்துடுங்கப்போ என்றது பெருசு.

நீ வேறண்ண எங்கண்ண இங்க மாடு இருக்கு..அதெல்லாம் பாஞ்சு இருபதஞ்சு வருசத்துக்கு முன்னடிதான் எவ்வளோ மாடு எவ்வளோ சப்பரம் என்னத்த சொல்ல..

பொண்ணுங்க எவ்வளோ எட்டிபாக்கும் இப்பெல்லாம் எங்கண்ண என்று பெருமூச்சு விட்டார் பெருசு.

காலங்கள் மாறபாரம்பரியத்தின் சுவடுகளைதான் நாம் திரும்பி பார்க்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails